Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,585
100. தேன் சிட்டுகள்
“முத்தமழை இங்கு கொட்டித் தீர்க்காதோ…மாருதம் தம் தம்!”
சண்டமாருதமாய் கொட்டித் தீர்த்த அவளின் கோபக் கனலில், அதிர்ந்து, ஆராய்ந்து, சுயம் உணர்ந்து,சூழல் அறிந்து, தகிக்கும் நிலவை, தன்னகத்தே அடக்கி, அவளுள் தன்னையும் ஒப்புக் கொடுத்திருந்தான் அந்த ஆதவன்.
சக்தி அவள் கோபத்துக்கு அஞ்சாத சிவம் உண்டோ? தவறு நம்பக்கம் எனில் தலைமகனானாலும் மண்டியிட்டுத் தான் ஆகவேண்டும் என்கையில், நம் ஆதிசிவா எம்மாத்திரம்.
ஆம், நேற்று நள்ளிரவில் அப்பாவோடு வீடு வந்தவனிடம், தன் அகத்தில் உள்ள மகிழ்வை வெளிப்படுத்தி, ஆசையாய் அளவளாவ காத்திருந்தாள் சித்திரை நிலா.
அவன் ஓய்ந்து வந்து படுக்கையில் விழுந்திருந்தாலும், பாவம் என பணிவிடை செய்து அடிபணிந்திருப்பாள். வந்ததும் வராததுமாக, ஹரிணியை பற்றி பிரஸ்தாபிக்க, வந்ததே கோபம், சண்டமாருதமாய் ஆயிரமாயிரம் கோபக் கனை தொடுத்து விட்டாள்.
“ வந்துட்டிங்களா? இவ்வளவு நேரம் ஆயிடுச்சு. எனக்காக இவ்வளவு மெனக்கெடட்துக்கு ரொம்ப தாங்க்ஸ். அப்பாவை பத்தி நிறைய பேரு பேசினாங்க” அவன் உடை மாற்ற, ஓய்வறை சென்று வர என இருக்க, இவள் மடை திறந்த வெள்ளமாய், மாவளி நிகழ்வுகளை மனம் நிறைந்து பேசிக் கொண்டிருந்தாள்.
“ எப்பவும், சந்தேகமாவே பார்க்கிற ராதா சித்தி கூட, உங்களை பாராட்டுனாங்க. ஒவ்வொரு விசயத்திலையும், சின்னவங்க, பெரியவுங்க எல்லாரோட தேவை, வசதி, பாதுகாப்புன்னு எல்லாத்தையும் கவனமா ஏற்பாடு செஞ்சிருந்தீங்களாம். ஊராட்சிலையும் முறையா பர்மிஷன் வாங்கி இருந்தீங்கனு பெருமையா சொல்லிட்டு இருந்தாங்க. எனக்கும் ப்ரவுட் மூமண்ட்” என அகம் மகிழ, “ ம்ம், ம்ம்” என்று மட்டும் பதில் தந்தானே ஒழிய உவகை இல்லை.
அப்போதும், களைத்து இருக்கிறான் என, “ கால் அமுக்கி விடவா” என காலைத் தொடப் போக,
“ வேண்டாம், வேண்டாம்” அரை டவுசர் அணிந்திருந்தவன், அவசரமாக மறுத்து சட்டென இழுத்துக் கொண்டான். அதில் சித்ரா தாக்கப்பட்டாள்.
“ ஏன் நான் உங்களை தொடக் கூடாதா” என இறங்கிய குரலில் கேட்க,
“ ஏய் லூசு, அப்படி யெல்லாம் இல்லை. நீயும் டயர்டா இருப்பியேண்டு சென்னேன்” என்றவன், எழுந்து அமர்ந்து,
“ இன்னைக்கு ஒரு தாத்தா வந்தாரு பார்த்தியா? “ என விருமனிடம் பேசி விட்ட இடத்திலிருந்து, உதயனின் தாத்தாவை பற்றி தான் கேள்விப் பட்டதை எல்லாம் சொல்லி,
“ எனக்கென்னமோ, மாட்டுக் கொட்டத்துக்கு தீ வச்சதே உதயனோண்டு டவுட்டா இருக்கு. பேரனுக்காக தாத்தா பழியை ஏத்துக்கிட்டாரோ என்னமோ. அவரு தெளிவா தான் இருக்காரு. அப்படி இருந்தா உதயன் சரியான சைக்கோவா இருப்பான். ஹரிணி பாவம்” என அடுக்கிக் கொண்டே போக, சித்ராவால் ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியவில்லை.
“ ஸோ வாட். அப்படி இருந்தா, நீங்க என்ன செய்யப் போறீங்க. ஹரிணிக்கு வாழ்க்கை கொடுக்கப் போறீங்களா? கல்யாணத்துக்கு முன்னாடி என் கிட்ட டீலிங் போட்டதெல்லாம் அதுக்குத் தானே. ஓகே ரைட், நம்ம டைவர்ஸுக்கு ஏற்பாடு பண்ணுங்க. உங்களுக்கு கஷ்டமா இருந்தா, ஹரீஷ் பாண்டி வக்கீல் தானே, அவருகிட்டையே கேட்போம். சொந்த தங்கச்சிக்காக செஞ்சி தருவாப்ல. நான் கையெழுத்து போட்டு கொடுத்துட்டு போயிட்டே இருக்கேன்” முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டுச் சொன்னாள்.
“ ஏய், நான் என்ன சொல்றேன். நீ என்னத்தை சொல்றவ” ஆதி ஆரம்பிக்க,
“ போதும், உங்களோட என்னால போராட முடியலை. நானும் இப்ப மாறிடுவீங்க, அப்ப மாறிடுவீங்கண்டு ஏதோ ஒரு நப்பாசையில ஆறு மாசம் காலத்தை ஓட்டிட்டேன்.” எனவும், அவன் குறுக்கிட முயன்றரன்.
“ நான் பேசி முடிச்சுக்குறேன்” என கை நீட்டி அவனை தடுத்தவள்,
“ உங்களுக்கு என்னை மனைவியா ஏத்துக்கிறதில நிறைய தயக்கம் இருக்கு. ஹரிணிக்கு துரோகம் பண்ணறதா நினைக்கிறீங்க. உதயன் மட்டும் இல்லை, நீங்களும் உளவியல் சிக்கலால் பாதிக்கப்பட்டவர் தான். ஹரிணிக்காக யோசிக்க நீங்க இருக்க மாதிரி, எனக்காக யோசிக்க ஒருத்தன் இல்லாமலா போயிடுவான். போதும் என்னை விட்டுருங்க. உங்களை மாதிரி போட்டிக்கு ஒருத்தியை கல்யாணம் கட்டாமல், கல்யாணம் ஆகாத ஒருத்தன், என்னை புரிஞ்சிகிட்டவனை, என்னை லவ் பண்றவனை கல்யாணம் பண்ணிக்கிறேன். ஏன் பாலாஜியே இருக்கானே” என அவள் பேசப் பேச ஆதிக்கு கோபம் வந்தது.
“ ஏய் லிமிட்டை தாண்டி போற, வேண்டாம்டி” என எரிச்சல்பட,
“ என்ன லிமிட்டைத் தாண்டினேன், உங்களை விடவா. உதயனை ஜெயிக்க, நீங்க தோத்து போகலையிண்டு காட்டிக்க, என்னை கட்டிக்கிட்டீங்க. நான் ஒரு கிறுக்கி, உங்க வேதனையை சகிக்க முடியாம சம்மதிச்சிட்டேன். டீலிங்கெல்லாம் போடும் போதே சுதாரிச்சு இருக்கனும். ஆசை யாரை விட்டுச்சு. எனக்கு தான் நீங்க லவ், ஒருதலை காதல். நான் உங்களுக்கு ஒரு ஆறுதல் ட்ராபி அவ்வளவு தான். உங்க நிஜ டார்கெட் ஹரிணி தான்.
அவளை ஜென்மத்துக்கும் மறக்க மாட்டிங்க. நமக்குள்ள அவள் இருந்துகிட்டே தான் இருப்பா. இதை யாராவது சொல்லிடுவாங்கண்டு தான், என் மேல அக்கறை இருக்க மாதிரி காட்டிக்கிறீங்க. நீங்க நல்லவராவே இருங்க. நான் கெட்டவளா போயிக்கிறேன்.” என பெட்டியை எடுத்து, தன் துணிமணிகளை அடுக்க முனைய, அதை பிடுங்கிப் போட்டவன்,
“ லூசாடி நீ. என்னன்மோ பேசுறவ. உன்னை போக விட்டுட்டு நான் வேடிக்கை பார்ப்பேண்டு நினைச்சியா? “ என எகிறினான்.
“ அது தான் சீன் போட வந்துடுவீங்களே. இந்த ட்ராமாவை பார்த்து, பார்த்து எனக்கு சலிச்சு போச்சு ஆதி. ஒவ்வொரு தடவையும், வெட்கம், மானத்தை விட்டுட்டு உங்க பின்னாடியே அலையிறேன், நீங்களும் எனக்கு ஹோப் கொடுக்கிற மாதிரியே எல்லாம் பண்ணிட்டு, கடைசில அவளை நடுவில கொண்டு வந்துடுறீங்க. எனக்கு அசிங்கமா இருக்கு. உடல் தேவைக்காக தாழ்ந்து போயிடுவேனோ, சுயமரியாதையை இழந்துடுவேனோண்டு பயமா இருக்கு” எனும் போது அவள் குரல் உடைய,
“ அப்படி எல்லாம் சொல்லாதடி, நான் உன்னை உசந்த இடத்தில தான் வச்சிருக்கேன்” என அவள் கன்னத்தை கையில் ஏந்தினான்.
அவனை விலக்கி,“ போதும் ஆதி , இப்படி பேசியே தான், என்னை உங்களை அண்ட விடாமல் பண்றீங்க. நீங்க என்னை காதலிக்கலைனாலும், என் காதல் உங்களை மாத்துமுண்டு பொய்மையில இருந்துட்டேன். அது சினிமால மட்டும் தான் நடக்கும். ரியல் லைஃப்ல இல்லை. உங்கள் லவ் ட்ரூ. உங்களால ஹரிணியை தாண்டி, என்னை ஏத்துக்க முடியாது. நானும் உங்களை காதலிக்கிறேன் தான், ஆனால் எனக்கு மீயுசித்தில இருக்க தெய்வீக காதல்லாம் வேண்டாம். இயல்பா ஆண், பெண் அட்ராகஷனோட என்னை ஏத்துக்கிற, ரியாலிட்டி புரிஞ்ச ஆண் போதும். என்னை விட்டுருங்க. இன்னைக்கு இல்லைனாலும், என்னை புரிஞ்சுகிட்டு, என்னை மட்டுமே சுத்தி வர்றவன் கிடைப்பான். அவனோட வாழ்ந்துக்குறேன். சுயமரியாதை இழந்து உங்க பின்னாடி திரிய முடியாது. கல்யாணத்தன்னைக்கு நீங்க சொன்ன மாதிரி மியூச்சுவலா பிரிஞ்சிடுவோம். “ என அவள் அறிவித்தாள்.
கையை கட்டி அவள் முன் இறுகி நின்றவன், “ நான் டைவர்ஸ் குடுக்க மறுத்தா” என தீர்க்கமாக கேட்க,
“உறவை அறுத்து விடச் சொல்லி, பெரியப்பா, சித்தப்பாகிட்ட போயி நிப்பேன்” என்றாள் அவளும் பிடிவாதமாக.
ஹாஹா வென சிரித்தவன், “ குட் ஜோக், நம்ம சேர்ந்து மாவளி திருவிழா நடத்தி இன்னும் ஒரு பொழுது கூட விடியலை. பொறுத்தமான ஜோடிண்டு, அம்புட்டு பேரும் சர்டிவிகேட் குடுத்திட்டு போயிருக்காங்க. நீ சொல்றதை யாரும் நம்ப மாட்டாங்க” என்றான்.
“ நம்புவாங்க. நான் இன்னும் கன்னியா தான் இருக்கேன். உங்களால ஒன்னும் முடியாதுன்னு சொல்லுவேன். மீனா அக்காவை வச்சே நிரூபிப்பேன்” அவள் முகத்தை திருப்பியபடி சவால் விட,
“ ஏய்” என அவளை மூர்க்கமாக பற்றியவன், “ பார்த்திருவோம்டி. உங்க அக்கா எப்படி சர்டிபிகேட் குடுக்குதுண்டு பார்த்துடுவோம். என்னால என்ன முடியும், முடியதுண்டும் பார்த்துடுவோம் ” என முன்னேற, அவளும் பலம் கொண்ட மட்டும் தள்ளி விட்டு, அவன் பிடியிலிருந்து நழுவினாள்.
மாட்டேன் என்றதை அடக்கிக் காட்டும் முனைப்போடு அவ்வறையை சுற்றி ஆடு, புலி ஆட்டம் நடந்துது.
“சும்மா வீம்புக்கு வராதீங்க, உங்களால ஹரிணியை மறந்துட்டு என்கிட்டே வரமுடியாது. அப்புறம் அதுக்கும் உங்களையே ஹேர்ட் பண்ணிக்குவிங்க” என இருவருக்கும் இடையிலான தூரத்தை அதிகப்படுத்த,
“அவ முன்னாள் காதலி தான், பொண்டாட்டிண்டா நீ மட்டும் தான் புரிச்சுக்கோ” அவனும் விடாப்பிடியாக சொல்ல,
“ஆமாம், ஆமாம் . பேருக்கு, சபைக்கு பொண்டாட்டி. எனக்கு அந்த போஸ்டிங் வேண்டாம், நீயே வச்சுக்கோ. நாளைக்கு காலையில இங்கிருந்து கிளம்பிடுவேன், அது உறுதி” என்றாள்.
“நான் உன்னை போக விடமாட்டேன், பார்ப்போமா?’ என சவால் விட்டபடி அவளை நோக்கி முன்னேற, “பாப்போம்” என பால்கனி பக்கம் சென்று கதவை அடைக்க முயல, அவள் முயற்சியை முடியெடுத்தவன்,
“சொல்லிகிட்டே இருக்கேன், என்னடி ரொம்ப தான் துள்ளுற” இறுக்கி அணைக்க,
“விடுங்க ஆதி” அவள் பெருங்குரலெடுத்து கத்த , சத்தம் வரும் முன் வன்மையாய் இதழொற்றலை தர, அதிர்ந்தவள் சுயம் உணர்ந்து சுதாரிப்பதற்குள், கட்டிலில் அவளோடு சரிந்திருந்தான்.
“ வேண்டாம் ஆதி, பக்கதில வராதே. கொலையும் செய்வாள் பத்தினி, வீம்புக்கு தொட்டிங்கண்டா, உங்களை கொன்டுருவேன்” என்றாள்.
“ கொல்லு பார்ப்போம்” என அவளை பற்ற, பற்றியவனை பெண்மைக்கே உரிய வேகத்தோடு, அடி, கடி, கிள்ளு என தன் எதிர்ப்பை காட்ட, அசால்டாக அவளை சமாளித்தான்.
“ பிடிக்காதவளை தொட்டேண்டா ஆயிசுக்கும் கஷ்டப்படுவ” அவள் மரியாதை விட்டு ஒருமையில் இறங்க,
“ பார்த்திருவோம்டி. எப்ப பஞ்சாயத்தை கூட்டுவேண்டு சொன்னியோ, அப்பவே முடிவெடுத்துட்டேன்.” என அவளை எழ விடாமல் லாக் செய்தவன், வன்முறையில் இறங்க, அவளும் பதிலுக்கு காட்ட, ஆடை நெகிழ்ந்து, ஆதி மனிதனை பற்றிய ஆசை ஆதியையும் பற்ற, ஆதி மனுசியின் நிலையே பெண்ணவளின் நிலையும் ஆனது.
ஆதி, சித்ரா இருவருக்குள்ளும் கணவன், மனைவி என்ற பிணைப்பும், பந்தமும், காதலும் கூட இருந்தது. மற்ற விசயங்களில் உரிமை எடுத்துக் கொண்டவர்கள், தாம்பத்தியத்தில் மட்டும் அவரவர் எல்லையை தாண்ட தயக்கம்.
எப்போதுமே பெண்ணானவள், வெளிப்படையாக ஆசையைச் சொல்லி விட மாட்டாள். முதல் அடி எடுத்து வைப்பது ஆணாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.
ஆதி திருமணத்துக்கு முன்பே, ஹரிணியை நேசித்த விசயம், சித்ரா முதற்கொண்டு எல்லாருக்கும் தெரியும், அதுவும் அவளிடம் ஒப்பந்தம் போட்டதால் விலகியே இருந்தான். ஹரிணி அவனை தவிர்த்து விட்டுப் போன, அந்த கணத்திலேயே அவள் தனக்கானவள் இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான். ஆக அவளோடு மீண்டும் சேரும் நோக்கம் ஒரு போதும் இல்லை.
ஹரிணி, உதயனால் ஏமாற்றப்பட்டு, சித்ராவை முன்மொழிந்த நொடி முதல், அவளை எல்லாவற்றையும் பகிரும் தோழியாக , தன் வாழ்வின் ஆதாரமாக, பற்றித் தான் திரிகிறான். அதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவில்லை அவ்வளவே.
அவள் மீது ஆசையும், நேசமும் இல்லாவிட்டால் வீம்புக்கு ஒரு முறை கூடி, விடுவித்து தூங்கியிருப்பான். நேசம் கொண்ட மனம், தான் என்ன பேசினாலும், அது வெறும் பேச்சாக மட்டுமே இருக்கும். பதிலாக தன்னை அவளுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் என்றே தயக்கத்தை உடைத்து அவளை ஆட்கொண்டு விட்டான்.
அமெரிக்கையாய் அடுத்தவருக்காக பார்த்த அத்தனை நாசூக்கும் இன்று அடிதடியாக உடல்கள் உரச, இரசாயணமாற்றங்கள் நிகழ்ந்து, தடைகள் தகர்ந்து தாம்பத்தியமும் அரங்கேறி இருந்தது.
கடைசி வரை, தன் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படாமல், சித்ரா எதிர்த்துக் கொண்டே இருக்க, அவனும் தன் ஆணவமான, தன் ஆண்மையை, பெண்மையிடம் தோற்று தனக்குத் தானே நிரூபித்துக் கொண்டான்.
சண்டைகள் ஆரம்பித்த தருணம் மட்டுமே தெரியும், அதன் பின் அதன் போக்கில் சண்டையிடுபவரை, அது இழுத்துக் கொள்ளும், காமமும் அப்படித் தான் . கத்தி சண்டைக்கே இந்த பாடு எனில், ஒருவர் மற்றவரில் தொலையும் தாம்பத்திய சண்டையில் கேட்கவா வேண்டும். சண்டையிட இட இனிமை கூடியது. யார் அதிகம் தாக்கு பிடிக்கிறார் என்ற போட்டா போட்டியில் கார்த்திகை மாதக் குளிரும் தன் பங்கையாற்ற, யுத்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது. வென்றவன், வெற்றிக் கொண்டவளுக்கு பரிசாய் முத்தமழை பொழிந்துக் கொண்டே இருக்க, அவளும் திண்டாடி போனாள்.
முழுதும் நனைந்த பின் முக்காடு எதற்கு, துவண்ட கொடியாய் கிடந்தவள், அப்போதும் அவனை முறைக்க, வெற்றிப் புன்னகையாய் அகம் நிறைந்து சிரித்தவன், “மாட்டேன், மாட்டேன்டே அம்புட்டையும் சாதிச்சிக்கிட்டடி. இன்னைக்கு தான் உனக்கு இந்த ட்ரிக் தெரிஞ்சிருக்கு. எங்க அம்மாச்சி கிழவி சொல்லிக் கொடுத்துச்சா” முத்தமிட்டபடியே கேட்க,
“ ஆமாம், ஸ்பெஷல் கிளாஸ் எடுத்தாங்க போடா” என முகம் திரும்பினாள். அதில் தான் அத்தனை அழகு.
“ என்னடி புருஷனை போடாங்குற” பொழுது புலரும் வேளையில் அதரத்துக்கு பேசும் வேலையையும் தந்தனர்.
“ ரைட்ஸ் இருக்கு, அதனால தான் “ என நமட்டுச் சிரிப்பு சிரிக்க, அதற்கும் பரிசளித்தவன்,
“ ஏய் சித்தி, தாலி கட்டினவன் நான், புருஷனுக்கு மருவாதை கொடுக்கனுமுல்ல” என்றான்.
“ சித்திண்டு சொன்னேனா கொன்றுவேன்” என்றவள், “ தாலி யாரு கழுத்தில இருக்கோ அவங்களை அதிகாரம் பண்ணலாம்ல, அது தான் பண்றேன்” என்றவள், அவன் கழுத்தில் கிடந்த தாலியை எடுத்துக் காட்ட,
“ அடிப் பாவி, இதை எப்படி கட்டின” என்றான் அப்பாவியாய்.
“ ஆமாம் கட்டுறாங்க. நீதான் பிடிங்கி போட்டுகிட்ட” என முறைக்க,
“ ஆமாம் நெஞ்சில குத்துச்சுண்டு வேகத்தில கழட்டினேன் ” என்றவன் அடுத்து தணிக்கை செய்யபட்ட வார்த்தைகளைச் சொல்லி, அதற்கும் அவளிடம் அடியும், கடியும் பெற்று தாம்பத்திய பரிட்சையில் முத்லநிலையே பெற்றான்.
“நினைச்சே பார்க்கலைடி. நல்ல வேளை கோபப்பட்ட “ என அவளைக் கட்டிக் கொள்ள,
“ ஆமாம் போ, நான் எவ்வளவு கற்பனையில இருந்தேன் தெரியுமா” என வருந்த,
“ எல்லாத்தையும் நிறைவேத்திக்குவோம். இப்ப தான் ஈருடல், ஓரியிரா ஆகிட்டமே. ஆனாச் சொல்லு, நான் உன் மேல காட்டுன பாசத்தை நடிப்புண்டா நினைக்கிற? நிஜமாவே உனக்கு ஒன்னுனா துடிக்குதது தெரியுமா. டெங்கு வந்து ப்ளேட்ஸ் குறையுதுண்டு சொல்லும் போதெல்லாம் உயிரே இல்லை. ஆறு மாசத்தில நீ என்னை உன் அடிமையா ஆக்கிட்ட. நீ இல்லாமல் எனக்கு இருக்க தெரியாது. இனிமே சுத்தம். உனக்கு அடிமை சாசனமே எழுதிக் கொடுத்திடுறேன்” உணர்ச்சி வசப் பட்டுச் சொல்ல,
“ கேட்க நல்லா தான் இருக்கு. குறுக்க ஹரிணி வராத வரைக்கும் தான் எல்லாம் “ என்றாள் அவள்.
“ இப்ப எதுக்கு அவளை ஞாபகப் படுத்துற? அவ உதயன் கூட குஜாலா இருப்பா. காஸ்மீர் ஹனிமூன் எல்லாம் போயிட்டு வந்தா. நம்மளும் போறோம், திறப்பு விழா முடியட்டும், சுஹானா தீவுக்கே போறோம். அசிங்கமா இந்த டிரஸ் எல்லாம் போடாமல் சுதந்திரமா இருக்கலாம்” என அவன் கண் சிமிட்ட,
“சீ” என அவள், அவனுள் முகம் புதைக்க,
“ இலை, தழை கட்டிக்குவோம். ஜிம்பாலே , ஜிம்பல ஜிம்பாண்டு போகலாம். என்ன ஒன்னு, யாருக்கும் சொல்லாமல் போகணும், இல்லையிண்டா பாசக்காரய்ங்க, ரெண்டு குடும்பமும், மொத்தமா டூருக்கு கிளம்பிடுவாய்ங்க. நம்ம ஜிம்பல ஜிம்பாண்டு இருக்க முடியாது” என்று சொல்ல, சித்ரா குலுங்கி சிரித்து , அவனுள் ஐக்கியமானாள்.
இந்த ஜோடி, பாண்டி குடும்பத்தின் இன்னொரு ஆதர்ச ஜோடியாக, இனிமையோடு இணைந்து இருக்கட்டும்!
ஜமீன் ஜோடியை காண செல்வோம்!

Last edited: